வருடாபிஷேக விழா
பெருநாழி: -பெருநாழி அருகே கமுதி யூனியனுக்குட்பட்ட கருத்தறிவான் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.9 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு செல்வ விநாயகர், தர்மமுனீஸ்வரர், ராஜகாளியம்மன், அய்யனார், அரியநாச்சி, கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் பூஜிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.