உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செல்வ கருப்பணசுவாமி கோயில் வருடாபிஷேகம்

செல்வ கருப்பணசுவாமி கோயில் வருடாபிஷேகம்

கமுதி: கமுதி அருகே மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் செல்வ கருப்பணசுவாமி கோயில் 17ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதனை முன்னிட்டு கிராமத்தில் உள்ள பாம்புலம்மன் கோயிலில் இருந்து பூஜாரி சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள், பூஜை பொருட்கள் அடங்கிய பூஜை பெட்டி மற்றும் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்றியுள்ள பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மூலைக்கரைப்பட்டி கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை