உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு

உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம் : டில்லியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.இந்திய அரசு கலை கலாச்சார துறை, மத்திய சாகித்திய நாடக் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத்துறை ராமநாதபுரம் மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மைய மாணவர்கள் ஹரிஷ்ராகுல், ஜெயஸ்ரீ, கலை இளமணி ஆகாஷ் ஜன.,26ல் புதுடில்லி குடியரசு தின விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்ட கலையை பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு முன்பாக கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.இதில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்து வந்த 5000 பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்றிணைந்து உலக சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்தி உள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி பாராட்டினார்.ராமநாதபுரம் மாவட்ட பகுதி நேர நாட்டுபுறக் கலைப்பயிற்சி மைய கரகாட்ட ஆசிரியர் பாண்டியம்மாள் ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை