மேலும் செய்திகள்
ஆரோக்கிய மாதா சர்ச் விழா
29-May-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அழியாதான் மொழி ஆரோக்கிய மாதா சர்ச் வெள்ளி விழாவை முன்னிட்டு சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஆரோக்கிய மாதா தேர்பவனி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக ஆரோக்கிய மாதா வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வட்டார அதிபர் தேவசகாயம், பங்கு பாதிரியார் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-May-2025