எய்ட்ஸ் கட்டுப்பாடு குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஜூலை 21 முதல் 31 வரை 20 கிராமங்களுக்கு சென்று எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை தொற்று நோய், ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் கலை நிகழ்ச்சி, நடமாடும் வாகனம் மூலம் குறும்படம் திரையிடப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் முருகேசன், பொதுசுகாதாரத்துறை விரிவாக்க அலுவலர் சுந்தரி, தொண்டு நிறுவன பணியாளர்கள் உடன் இருந்தனர்.