உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

கமுதி: கமுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் காப்பியக்கனி, எஸ்.ஐ.,க்கள் பிரவீன்குமார், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சாலை விதிகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும். மது அருந்தி வாகனங்கள் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை ஆய்வாளர்கள் சூரியகாந்தி, கண்ணுச்சாமி, சாமுவேல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ