மேலும் செய்திகள்
இன்று மின் குறைதீர் கூட்டம்
24-Jun-2025
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் தெருவோர கடைகள் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. 92 கடைகள் பதிவு செய்யப்பட்டன.ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் வழிகாட்டுதலின் படி ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், பயிற்சியாளர் காமேஸ் பால்ராஜ் ஆகியோர் இணைந்து ராமநாதபுரத்தில் காய்கறி கடைகள் வைத்து தெருவோரத்தில் விற்பனை செய்பவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற 92 கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு பதிவு செய்து சான்றிதழ் பெற்றனர். காய்கறி விற்பனையாளர் சங்கத்லைவர் ஆனந்த், செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
24-Jun-2025