உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் பிரசவித்த குழந்தை  உயிரிழப்பு 

ராமநாதபுரத்தில் பிரசவித்த குழந்தை  உயிரிழப்பு 

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துமனை டாக்டர் மீது நடவடிக்கை கோரி தாய் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்துள்ளார்.பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த பவித்ரா மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் நேரு. எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நான் கருவுற்ற நிலையில் ஜூன் 11ல் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டேன். ஜூன் 14 இரவு 2:45 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காலை 6:00 மணிக்கு நான்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் மூச்சுத் திணறல் இருப்பதாக வேறு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் தலையில் வீக்கமும், ரத்த கசிவும் இருந்தது. குழந்தை பிழைத்தாலும் மன வளர்ச்சி குன்றியதாக இருக்கும் என்றனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லை என்பதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தது. குழந்தை இறப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவித்ரா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை