மேலும் செய்திகள்
பார் உரிமையாளர் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
28-Jun-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் பார் உரிமையாளர் நிர்மல் என்பவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் சூரன்கோட்டையை சேர்ந்தவர் நிர்மல் 34, இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.எஸ்., மடை பகுதியை சேர்ந்த நமசக்தி என்பவருக்கும் இடையே அரண்மனை அருகில் உள்ள மது பாரில் தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக நிர்மல் தனது பாரிலிருந்து தேவி பட்டினம் சந்திப்பு சாலை அருகே ஜூன் 16ல் டூவீலரில் சென்ற போது அங்கு வந்த நமசக்தி உற வினர்களான செந்தில் குமார் மகன் பாரத் 24, முத்துராமன் மகன் அபினேஷ் 23, மற்றும் சிலர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காய மடைந்த நிர்மல் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிர்மல் மனைவி கண்ணகி புகாரில் வழக்குப் பதிவு செய்த பஜார் போலீசார் 8 பேரை கைது செய்தனர். இதில் பாரத் மற்றும் அபினேஷ் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனுக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் இருந்த இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
28-Jun-2025