உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் வாய்க்கால், வரப்பில் இரை தேடி குவியும் பறவைகள்

மழையால் வாய்க்கால், வரப்பில் இரை தேடி குவியும் பறவைகள்

ராமநாதபுரம், : மழை பெய்துள்ளதால் ராமநாதபுரம்- நயினர்கோவில் ரோடு, கிழக்குகடற்கரை சாலையோர வயல் வெளிகள், ஓடைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இப்பகுதிகளில் இரைக்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. தற்போதும் பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அழகன்குளம் நதிப்பாலம் நீர்பிடிப்பு பகுதிகள், ராமநாதபுரம், நயினர்கோவில் ரோடு, கிழக்கு கடற்கரை சாலையோர வயல்வெளிகள், ஓடைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு புழுக்கள், பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. இவற்றை அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் அலைபேசியில் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ