உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை 

ராமநாதபுரத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பா.ஜ., சார்பில் மாநில ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்எச்.ராஜா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நடந்த உறுப்பினர் சேர்க்கைக்கு மாநில ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எச்.ராஜா, தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில விவசாய பிரிவு செயலாளர் பிரவீன்குமார், வழக்கறிஞர்கள் சவுந்திர பாண்டியன், சண்முகநாதன், நகராட்சி கவுன்சிலர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, ஊடக பிரிவு தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வீடுகளில் சென்று பா.ஜ., உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை