கல்லுாரியில் ரத்த தான முகாம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். கீழத்துாவல் வட்டார டாக்டர் ராஜேஷ், டாக்டர்கள் மணிமொழி, நாகநாதன் முன்னிலை வகித்தனர். 40க்கும் மேலான மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி, பேரா சிரியர் ஜெயராணி, திட்ட அலுவலர்கள் நிர்மல் குமார், நாகராஜ் கலந்து கொண்டனர்.