உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமப்புற பெண்களுக்கு மார்பக பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

கிராமப்புற பெண்களுக்கு மார்பக பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜோயாலுக்காஸ் சார்பில் பெண்களுக்கான மார்பக சுகாதார பரிசோதனை முகாம் மூன்று நாட்கள் ராமநாத புரம் ேஷாரூமில் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதா ராணி துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: மார்பக புற்றுநோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வழக்கமான பரிசோதனை, சுய பராமரிப்பு அவசியம். ஆரம்ப காலத்தில் நோயை கண்டறிவதன் மூலம் எளிதாக குணப்படுத்த முடியும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் என்றார். தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமப்புற பெண்கள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு மார்பக சுகாதார கல்வி, மார்பக புற்றுநோய் குறித்த தவறான கருத்துகள், ஆரம்பகால நோய் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இறுதியாக ஜோயாலுக்காஸ் குழுமப் பிரதிநிதி கூறியதாவது: பெண்கள் தங்களின் உடல் நல ஆரோக்கியத்தை அறிந்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப் படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை