நல்லிருக்கைக்கு பஸ் இயக்கம்
உத்தரகோசமங்கை: ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக நல்லாங்குடி மற்றும் நல்லிருக்கைக்கு வழித்தடத்தில் புதிய டவுன் பஸ் துவக்க விழா நடந்தது. ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக சுற்றுவட்டார கிராமங்கள் பயனடையும் வகையில் நல்லிருக்கைக்கு வரக்கூடிய 24ம் வழித்தடம் புதிய டவுன் பஸ்சிற்கு கிராம மக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், தன்னார்வலர் முத்துக்குமார், மகளிர் மன்றங்கள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.