உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி, மாசி அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யுங்கள்

புரட்டாசி, மாசி அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யுங்கள்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் மகாளய அமாவாசைக்கு பொது தரிசனத்தை அமல்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். முக்கிய விழா நாட்களில் ஹிந்து அறநிலைத்துறையின் முக்கிய கோயில்களில் கூட்ட நெரிசலால் ஏற்படும் பக்தர்கள் உயிரிழப்பை தடுக்க கட்டண தரிசனத்தை ரத்து செய்து அனைத்து வழிகளிலும் பொது தரிசன முறை அமல்படுத்தப்படும் என ஏப்ரலில் சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டார். அதன்படி ஜூலை 24ல் ஆடி அமாவாசையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அனைத்து கட்டணத்தையும் ரத்து செய்து பொது தரிசனத்தை அமல்படுத்தியதால் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர். முதல்வர் உத்தரவிடுவாரா ஆடி அமாவாசை போல் நேற்று முன்தினம் மகாளய அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். இத்தருணத்தில் பொது தரிசன முறை இல்லாமல் கட்டண தரிசனத்தில் டிக்கெட் எடுத்து சுவாமி தரிசனம் செய்யவும், இலவச தரிசன வழியில் செல்லும் பக்தர்களும் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். தமிழ்நாடு வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், ஆடி அமாவாசைக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்தது போல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி, அமாவாசை, மகாளய அமாவாசை நாளிலும் பக்தர்கள் நலன் கருதி அனைத்து கட்டண தரிசனத்தையும் ரத்து செய்ய வேண்டும். பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி