நெல் கொள்முதல் மையம் அமைக்க வழக்கு
மதுரை : முதுகுளத்துார் வழக்கறிஞர் முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாக்களில் தமிழக அரசின் நெல் கொள்முதல் மையம் இல்லை. தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. நெல் கொள்முதல் மையங்கள் துவக்க வலியுறுத்தி தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர், மண்டல முதுநிலை மேலாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.