உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பொசுக்குடி அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் அருகே மகிண்டி குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து பொசுக்குடி, வெங்கலக்குறிச்சி, பட்டி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் பொசுக்குடி அருகே ரோட்டோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது இதனால் தினந்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ