மேலும் செய்திகள்
காவிரி குழாய் உடைப்பால் சேதமடைந்துள்ள ரோடு
16-Sep-2025
வீணாகும் காவிரி குடிநீர்
01-Sep-2025
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் ராமநாதபுரம் ரோட்டில் சுடலை மாடசாமி கோயில் அருகே செல்லும் காவிரி குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்பகிறது. முதுகுளத்துார் ராமநாதபுரம் ரோடு சுடலை மாடசாமி கோயில் அருகே செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவு நீரில் கலக்கிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக குழாய் உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் சரி செய்தனர்.
16-Sep-2025
01-Sep-2025