உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தில் சிசிடிவி சேதம் பாதுகாப்பு கேள்விக்குறி

பாம்பன் பாலத்தில் சிசிடிவி சேதம் பாதுகாப்பு கேள்விக்குறி

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சி.சி.டிவி., கேமரா சேதமடைந்ததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பாம்பன் கடலில் 1988ல் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் ராமேஸ்வரம் தீவை இணைப்பதாக உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கின்றனர். 36 ஆண்டுகள் வயதான இப்பாலத்தின் நடுவில் உள்ள இரும்பு பிளேட் சேதமடைந்தும், தடுப்பு சுவர்கள் உப்புக்காற்றில் அரித்தும் அடிக்கடி உடைந்தது.மேலும் ஏராளமான சுற்றுலா வாகனங்களை பாலத்தின் நடுவில் நிறுத்துவதால் நெரிசல் மற்றும் பாலம் பலமிழக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் பாலத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்து அப்புறப்படுத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பு கருதி 2024ல் அப்போதைய போலீஸ் எஸ்.பி., தங்கத்துரை உத்தரவுப்படி பாலத்தில் 11 சி.சி.டிவி., கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். காலப்போக்கில் இதனை பராமரிக்க போலீசார் முன்வராததால் அனைத்து சி.சி.டிவி., கேமராக்களும் உடைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பழுதான கேமராக்களை சரிசெய்து பாலம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ