உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய நுண்ணறிவு பிரிவினர் சோதனை

மத்திய நுண்ணறிவு பிரிவினர் சோதனை

கமுதி: கமுதியில் மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சார்பில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.கமுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையில் எஸ்.ஐ., சரவணன்,மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் கோதண்டபாணி முன்னிலையில் ஆய்வு செய்தனர்.அப்போது தொழிற்சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட மெத்தனால், எத்தனால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மற்றும் பல்வேறு சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.பின்பு வேதிப்பொருட்கள் சேமித்தல் மற்றும் கையாளும் வழிமுறைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் அனுமதியின்றி வேதிப்பொருட்கள் விற்பனை செய்வது மற்றும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ