உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: நெல் விவசாயிகள் கலக்கம்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: நெல் விவசாயிகள் கலக்கம்

தேவிபட்டினம் : கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் நெல் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பெரும்பாலான தாலுகாக்களில் மகசூல் நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் தாலுகாக்களில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் கண்மாய், குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதுடன் சில பகுதிகளில் கண்மாய் மறுகால் பாய்ந்து விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால், நெல் வயல்களின் நிலவும் ஈரப்பதத்தால் விளைந்த நெற்கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்வதில் விவசாயிகள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நெல் அறுவடை பணியை மேற்கொண்டு வரும் நெல் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.மழை பெய்தால் அறுவடை வாகனங்கள் வயலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், நெற்கதிர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ