சதுர்த்தி விழா காப்பு கட்டு
திருவாடானை : திருவாடானை பஸ் ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி கோயிலில் சதுர்த்தி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஆக.,27 விநாயகர் சதுர்த்தி அன்று பால்அபிேஷகம் நடைபெறும். அன்று இரவு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடும்.