உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி இருவேலி--ஹவுசிங் போர்டு வரை சந்தனமர ஓடையில் ஆக்கிரமிப்பு வெள்ளக் காலங்களில் தொடரும் பாதிப்பு

சாயல்குடி இருவேலி--ஹவுசிங் போர்டு வரை சந்தனமர ஓடையில் ஆக்கிரமிப்பு வெள்ளக் காலங்களில் தொடரும் பாதிப்பு

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி இருவேலி கண்மாயில் இருந்து ஹவுசிங் போர்டு வழியாக உள்ள பகுதிகளில் ஒரு கி.மீ.,க்கு அதிகமான இடங்களில் சந்தன மர ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இருவேலி கண்மாயில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர் ஹவுசிங் போர்டு வரை அதன் வழித்தடம் இருந்தது. தற்போது சந்தன மர ஓடையில் வழித்தடத்தில் அதிகளவு தனியார் ஆக்கிரமிப்பால் ஓடை சுருங்கி நாளடைவில் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாயல்குடி சி.பி.ஐ.எம்.எல்., கட்சி கடலாடி தாலுகா செயலாளர் முருகேசன் கூறியதாவது:ஒவ்வொரு பருவ மழைக் காலங்களிலும் இருவேலி கண்மாய் வழியாக கதவணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் சந்தன மர ஓடையின் வழியாக சாயல்குடி எம்.ஜி.ஆர்., ஊருணியை நிரப்பி அருகிலுள்ள நீர்நிலைகளை நிரப்பி செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளில் சந்தன மர ஓடை செல்லக்கூடிய இரு வழித்தடங்களிலும் அளவுக்கு அதிகமாக தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் ஓடை சுருங்கி 80 அடி அகலம் கொண்ட ஓடை தற்போது 10 அடியாக சுருங்கிவிட்டது. டிச.19ல் சாயல்குடி நகருக்குள் வெள்ள நீர் புகுந்ததற்கு ஆக்கிரமிப்பாளர்களே காரணம். எனவே கடலாடி வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் சந்தன மர ஓடை வழித்தடங்களை முறையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.சாயல்குடியில் இருந்து எஸ்.இலந்தைகுளம் செல்லும் சாலை இரு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சேதடைந்துள்ளது. இந்த சாலையை கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பார்வையிட்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்களை ஒன்று திரட்டி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ