உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

கீழக்கரையில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் ரெங்கநாயகி வரவேற்றார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சித்ராதேவி, குழந்தைகள் நல உறுப்பினர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவலர்கள் உதயகுமார், தமிழ்செல்வன் மற்றும் சமூக நலத்துறை, போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல், போக்சோ சட்டம் குறித்தும் ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ