மேலும் செய்திகள்
கணவர் 2ம் திருமணம் போலீசில் மனைவி புகார்
07-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை, களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, 36; ராமநாதபுரம் நகர் வடக்கு மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வருகிறார்.இளையராஜா சூரன்கோட்டையில் ஒரு வீட்டில், 22 வயது வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பெற்றோர் வெளியில் சென்ற பின் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்ற இளையராஜா, மனநலம் பாதித்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதை கிராமத்தினர் கவனித்து இளையராஜாவை பின் தொடர்ந்து சென்றனர். செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதை அறிந்து சத்தம் போட்டனர்.இளையராஜா தப்பி செல்ல முயன்ற போது, கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.பெண்ணின் வளர்ப்பு பெற்றோர் புகாரில், இளையராஜாவை பஜார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-Oct-2024