பாம்பன் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு அருட்ச கோதரி ரூபி தலைமை வகித்தார். இயேசு பிறப்பின் சிறப்பு அம்சம் குறித்து பாம்பன் பாதிரியார் அன்புராஜ் விளக்கிப் பேசினார். கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாதிரியார் டேனியல் பரிசுகள் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு கல்லுாரி மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அருட்சகோதரி எமல்டா ராணி நன்றி கூறினார்.