உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாய்மை சேகரிப்பு பணி; அரசு அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

துாய்மை சேகரிப்பு பணி; அரசு அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் துாய்மை சேகரிப்பு இயக்கம் 2.0 திட்டத்தில் துாய்மைப் பணி நடப்பதை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துாய்மை சேகரிப்பு இயக்கம் 2.0 திட்டத்தில் மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஊராட்சி அளவில் உள்ள தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், காவல் துறை, மகளிர் திட்டம், கல்வித் துறை, வேளாண் துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உள்ளடக்கும் வகையில் ஒருங்கிணைத்து துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனகலெக்டர் தலைமையில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், துாய்மை இயக்க உறுதிமொழி எடுத்தனர். கலெக்டர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து பயன்படுத்தப்படாத தேவையற்ற பொருட்கள் கண்டறிந்து அதனை கழிவு நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை