மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
6 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
6 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
6 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் பருவமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:முதுகுளத்துார் வட்டாரத்தில் 19 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஒருசில இடங்களில் சற்று தாமதமாக விதைப்பு பணி துவங்கினர். கடந்த மாதம் முதுகுளத்துார் வட்டாரத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழை நீரில் சாய்ந்து விட்டது.செல்வநாயகபுரம், விளங்குளத்துார், விளக்கனேந்தல், கீழக்குளம், மணலுார், ஆனைசேரி, வெங்கலக்குறிச்சி, மேலத்துாவல், திருவரங்கம், வளநாடு, பூசேரி, காக்கூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வேளாண்மை அலுவலர், துணை அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து வருவாய்த்துறையினர் உடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago