உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் விழாவை துவக்கி வைத்தனர்.மதுரை சரஸ்வதி நாராயணன் கலை, அறிவியல் கல்லுாரி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் உமா, உடல் நலம் பாதுகாப்பது குறித்து பேசினார். போட்டிகளில் வென்றவர்கள், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆண்டு விழாவை முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டாக்டர் ஜாகிர் உசேன் கல்லுாரி தமிழ் துறை தலைவர் அப்துல் ரஹீம் படிப்புடன் கூடிய விளையாட்டு வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்க வேண்டும் எனப் பேசினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளைக் கல்லுாரி அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ