உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் நெரிசல்

ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் நெரிசல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் ரோட்டோரத்தில் கண்டபடி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகர் அரண்மனைப்பகுதி, அக்ரஹாரம் வீதி, தலைமை தபால் நிலையம் ரோடு, சாலைத்தெரு, அரண்மனை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் என ஏராளமாக வணிக வளாகங்கள் உள்ளன. இதன் காரணமாக எப்போதுமே இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க வருபவர்கள் சாலைத்தெரு ரோட்டை ஆக்கிரமித்து கண்டபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வரும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி