மத்திய அரசை கண்டித்து காங்., மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில் பா.ஜ., மத்திய அரசின் ஓட்டு திருட்டு மற்றும் இந்திய தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை கண்டித்தும் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் செய்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசை கண்டித்து கோஷமிட்டனர். அதன்பிறகு மெழுகுவர்த்தி ஏந்தி வழிவிடு முருகன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர்.இதில், திருவாடானை எம்.எல்.ஏ., கரு மாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர் ராஜாராம்பாண்டியன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.