மேலும் செய்திகள்
புதருக்குள் வீசப்பட்ட பயணியர் நிழற்குடை
23-Sep-2024
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகளை அகற்றுவதில் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான பயணியர் நிழற்குடைகளுக்கு பராமரிப்புக்கென தொகை ஒதுக்கி சீரமைத்துள்ளனர். இந்நிலையில் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை கணக்கிட்டு அகற்றுவதில் ஒப்பந்ததாரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது இடித்து அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து பஸ்சிற்காக காத்திருந்து செல்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது:பெரும்பாலான பயணிகள் நிழற்குடைகள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றை அகற்றி விட்டு ரூ. 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை பயணியர் நிழற்குடை கட்டலாம் என்ற எண்ணத்தில் அகற்றி வருகின்றனர். லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் கூறுகையில், தற்போது எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிதாக கட்டும் பணி துவங்க உள்ளது என்றனர்.
23-Sep-2024