உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு சங்கங்களில் பல கோடி ரிபேட் பாக்கி

கூட்டுறவு சங்கங்களில் பல கோடி ரிபேட் பாக்கி

பரமக்குடி: கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரிபேட் பாக்கி தொகையை வழங்க வலியுறுத்தி நெசவாளர் பெடரேஷன் சார்பில் அக்., 21 பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேசன் நிர்வாக குழு கூட்டம் தலைவர் சேசையன் தலைமையில் நடந்தது. செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன் முன்னிலை வகித்தனர். துணைசெயலாளர் நாகராஜன் வரவேற்றார்.அப்போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக வழங்கப்படாமல் உள்ள பல கோடி ரூபாய் ரிபேட் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நெசவாளர்களின் தறி கூலி வங்கி காசோலை மூலம் வழங்க வேண்டும், என்ற துறையின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து சங்கங்களில் புள்ளிவிபரங்கள்,திடீர் ஆய்வு என்ற நடவடிக்கையில் நெசவாளர்களையும், சங்க பணியாளர்களையும் அலைக்கழிப்பதை துறை உயர் அதிகாரிகள் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகம் முன் அக்., 21ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. சங்க துணை தலைவர்கள் கோவிந்தன், விஸ்வநாதன், நாகநாதன், துணை செயலாளர் நாகராஜன், நிர்வாகஸ்தர்கள் குப்புசாமி, முரளி, குமார், பாஸ்கரன்பங்கேற்றனர். பொருளாளர் கணேஷ் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி