ரோட்டில் திரியும் மாடுகள்: விபத்துகள் அதிகரிப்பு
திருவாடானை: தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.திருவாடானை பகுதியில் கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பால் கரக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு சாலையில் திரிகின்றன. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலா வருகின்றன. வாகனங்கள் செல்லும் போது திடீரென மிரண்டு ஓடும் மாடுகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளால் தினமும் விபத்துகள் நடந்து காயமடைவது வழக்கமாக உள்ளது. மாடு உரிமையாளர்கள் மாடுகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்.