உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர்நிலைகளில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க   

நீர்நிலைகளில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க   

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் கண்மாய், ஊருணிகளில் குளிக்கும்போது உயிர் பலி ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும்பாலன கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், கண்மாய், குளங்கள் முழுவதும் நிரம்பும். இந்நிலையில் ஆழம் தெரியாமல் கண்மாய், ஊருணிகளில் இறங்கி குளிக்கும் போது மூச்சு திணறி உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு அணிக்கி, அத்தாணி கண்மாய்களில் இருவர் ஒரே நாளில் இறந்தனர். நீர் நிலைகளுக்கு சென்று மீன்பிடிப்பது, ஆழம் தெரியாமல் குளிப்பது போன்ற சம்பவங்களால் பலி அதிகமாகிறது. எனவே மழைக்கு முன் ஆபத்தான கண்மாய், ஊருணிகளுக்கு முன் எச்சரிக்கை பலகை வைப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ