உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிரிக்கெட் போட்டி

 கிரிக்கெட் போட்டி

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முதல் துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது. முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் ஆடவர், மகளிருக்கான போட்டிகள் தனித்தனி பிரிவுகளாக நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி மைதானங்களிலும் போட்டிகள் நடந்தது. 9 மகளிர் அணிகளும், 17 ஆண்கள் அணியையும் கலந்து கொண்டனர். செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூது துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், பேராசிரியர் சந்திரசேகர், நுாலகர் பால்ராஜ் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஜன., 22ல் பரிசு கோப்பை வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ