உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகூர்த்த நாள் கூட்ட நெரிசல்

முகூர்த்த நாள் கூட்ட நெரிசல்

திருவாடானை:திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முகூர்த்த நாளான நேற்று 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. பெரும்பாலானோர் கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் கோயில் முன்பு நெரிசல் ஏற்பட்டது. கார்கள் அணிவகுத்து நின்றன.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. கோயில் வாசல் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ