சேதமடைந்த நிழற்குடை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் -கமுதி ரோடு சித்திரக்குடி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ.,ல் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.