உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி அருகே திறந்த நிலை கழிவுநீர் கால்வாயால் ஆபத்து

பள்ளி அருகே திறந்த நிலை கழிவுநீர் கால்வாயால் ஆபத்து

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ராதானுார் ஊராட்சி மேடா கோட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் திறந்து கிடப்பதால் மாணவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ராதானுார் அருகே மேடாகோட்டை ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அரசு நடுநிலைப்பள்ளி, அதன் அருகே அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. குழந்தைகள், பள்ளி மாணவர்கள் நடந்து வரும் பகுதியில் சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்த கிடக்கிறது. இதனால் ஓடி விளையாடும் குழந்தைகள், மாணவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் துர்நாற்றத்தால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை மூடி போட்டு மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை