உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன் மார்க்கெட் பகுதியில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மீன் மார்க்கெட் பகுதியில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பூவானிப்பேட்டை, மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பதியில் உள்ள பல்வேறு தெருக்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்களின் பில்லர் கம்பிகள் வெளியில் தெரிவதுடன் மின்கம்பத்தின் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து விழுந்து வருவதால் டிரான்ஸ்பார்மர் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.மேலும் அருகில் பல்வேறு குடியிருப்பு வீடுகள் உள்ளதாலும் சிறுவர்கள் அதிகளவில் சென்று வரும் பகுதியாக உள்ளதாலும் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து ஆர்.எஸ். மங்கலம் இளைஞர் மஜீத் சேவைக் குழு நிர்வாகிகள் சார்பில், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ