சாயல்குடியில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் அதிகளவு பொதுமக்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கும் இடையூறாக உள்ள கடைகளால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் முன்னிலை வகித்தார். கடலாடி தாசில்தார் முருகேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, தலைமை எழுத்தர் செல்ல மாரியப்பன், மண்டல துணை தாசில்தார் நாகராஜன், துணைத் தாசில்தார் தேவி, சாயல்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் இமயவரம்பன் மற்றும் போலீசார் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து பேசப்பட்டது.