உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை  உடனடியாக அமல்படுத்த கோரிக்கை

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை  உடனடியாக அமல்படுத்த கோரிக்கை

ராமநாதபுரம்: வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். சென்னையில் வழக் கறிஞர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் அன்புச் செழியன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: சென்னையில் தமிழ்நாடு பார் கவுன்சில் முன்பாக வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். தமிழக அரசு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை யெனில் தமிழகம் முழு வதும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும். இந்த விவகாரத்தில் பார் கவுன்சிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வழக்கறிஞர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் 2021ல் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது வரை பார்லிமென்டில் ஒப்புதல் அளிக்க வில்லை. அதை செயலாக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி