உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை

விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை

சாயல்குடி :விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்க வங்கியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலாடி அருகே ஒச்சத்தேவன் கோட்டையைச் சேர்ந்த பா.ஜ., விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர் முருகவேல் கூறியதாவது:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு எவ்வித அடமானமும் இன்றி ரூ. 2 லட்சம் வரை வழங்குவதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டது.அதனடிப்படையில் தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத கடலாடி வட்டார விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் விதமாக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக அந்தந்த பகுதியில் வசிக்கக்கூடிய முறையான விவசாயிகளுக்கு அடமானம் இன்றி ரூ.2 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை