/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூரில் பூட்டியே உள்ள தம்பிராட்டி அம்மன் கோயில்; வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்
மாரியூரில் பூட்டியே உள்ள தம்பிராட்டி அம்மன் கோயில்; வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்
சாயல்குடி : மாரியூர் தம்பிராட்டி அம்மன் கோயில் பூட்டியே இருப்பதால் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்கின்றனர்.சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் பிரதான சிறப்பு பெற்ற தம்பிராட்டி அம்மன் கோயில் உள்ளது. கடற்பாறையால் வடிவமைக்கப்பட்டதாக கோயிலின் சன்னிதானம் அமைந்துள்ளது. மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலின் துணைக்கோயிலாக விளங்குகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. பக்தர்கள் கூறியதாவது:பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் கோயிலுக்கு முறையான நித்தியகால பூஜையின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் பக்தர்கள் பூட்டப்பட்டுள்ள கோயிலில் வழிபட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இக்கோயிலை முறையாக திறந்து பக்தர்களின் தரிசனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.