உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

 ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். அதிகளவிலான பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை கடல் 100 மீ., உள்வாங்கியதால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. மதியம் 2:00 மணிக்கு மேல் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !