உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு வங்கியில் போதிய இருக்கை வசதியின்றி சிரமம்

கூட்டுறவு வங்கியில் போதிய இருக்கை வசதியின்றி சிரமம்

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை தாலுகா அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.இங்கு முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்கின்றனர்.விவசாய கடன் உள்ளிட்ட தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் குழுக்களுக்கு லோன் உள்ளிட்டவை வங்கியில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் வங்கிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.வங்கியில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் மக்கள் வெளியில் மரத்தடியில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இங்கு தரைத்தளம் சேதமடைந்து இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.வெயில், மழை காலத்தில் மரத்தடியில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.பல்வேறு பணிக்காக வரும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. வங்கியில் இருக்கை வசதியும்,கூடுதல் கவுன்டர் திறக்கப்பட்டு பணியாளர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை