உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை விளக்கப் பயிற்சி

பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை விளக்கப் பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் பேரிடர் மீட்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமை வகித்தார். இயற்கை சீற்றத்தின் போது, பதட்டமின்றி தங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பத்திரமாக மீட்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களிடம், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இயற்கை இடிபாடுகளில் சிக்கியவர்களை, மீட்பது குறித்தும், அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் தாசில்தார் வரதராஜன் உட்பட வருவாய்த் துறையினரும், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி