மேலும் செய்திகள்
ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
11-May-2025
பரமக்குடி : பரமக்குடி அருகே மதுரை நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டை மறைத்து தி.மு.க., பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் எதிர் திசையில் சென்றதால் விபத்து அச்சம் ஏற்பட்டது. தி.மு.க., தலைமை கட்சி கொடிகள் கட்டுவதில் தொடங்கி, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது என பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதிக்கிறது. தொடர்ந்து தொண்டர்கள் இதனை மீறும் நிலையில் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இச்சூழலில் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் ராம் நகர் பகுதியில் நாடு போற்றும் நான்காண்டு சாதனைக்கான பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக முதுகுளத்துார் ரோடு மற்றும் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையை இணைக்கும் மேம்பாலம் பகுதியில் மேடை அமைக்கப்பட்டது. மேடையானது முதுகுளத்துார் ரோட்டில் இருந்து மதுரை செல்லும் சர்வீஸ் ரோட்டில் அமைக்கப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உண்டாகியது. இதனால் எதிர் திசையில் சுமார் ஒரு கி.மீ., வரை வாகனங்கள் சுற்றி சென்ற நிலையில் நான்கு வழிச் சாலையில் விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணித்தனர். ஆகவே இது போன்ற பொதுக்கூட்டம் மேடையே போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், தி.முக., கட்சி தலைமையும் தொண்டர்களுக்கு முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
11-May-2025