உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசுமையாக மாறியது டி.எஸ்.பி., அலுவலகம்

பசுமையாக மாறியது டி.எஸ்.பி., அலுவலகம்

முதுகுளத்துார்,: முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே டி.எஸ்.பி., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. பசுமையாக மாற்ற வளாகத்தை முழுவதுமாக சுத்தம் செய்து ஏராளமான மரக்கன்றுகள் வைத்துள்ளனர். வளாகத்தில் மூலிகைச் செடிகள், கொய்யா, வாழை, மாதுளை, துளசி உள்ளிட்ட ஏராளமான செடிகள் நட்டு பராமரித்து வருகின்றனர். ஓய்வு நேரத்தில் இருக்கும் போலீசார் செடிகளுக்கு தண்ணீர் விட்டு மரங்களை பராமரிக்கும் வேலை செய் கின்றனர். இதனால் டி.எஸ்.பி., அலுவலகம் முழுவதுமாக பசுமை சூழ்ந்து காணப்படுகிறது. மனு அளிக்க வரும் பொதுமக்கள் நிழலில் காத்திருப்பதற்கும் வசதியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி