உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் பகுதியில் தசரா விழா கோலாகலம்

முதுகுளத்துார் பகுதியில் தசரா விழா கோலாகலம்

முதுகுளத்துார: முதுகுளத்துார் அருகே பொசுக்குடியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. குலசை ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் கும்பம் எடுத்து வந்து பொசுக்குடி அம்மன் கோயிலில் இருந்து கும்பவீதி உலா நடந்தது. சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. மாலை அணிந்த பக்தர்கள் மயான காளி, கருப்பன், முருகன், பிள்ளையார், அம்மன், குறவர், குறத்தி, செவிலியர், ராணி, ராஜா உட்பட ஏராளமான வேடமணிந்து அம்மன் கோயிலில் இருந்து கிராமத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு ஆதனக்குறிச்சி கிராமத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை பொசுக்குடி தசரா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை